எடப்பாடியார் உறுதியளிக்கிறார்
1.கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவை கருத்தில்கொண்டு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500/- என லாபகரமான நியாய விலை (Fair and Remunerative price) நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகள்பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

3.நெல் உற்பத்திச் செலவை கருத்தில்கொண்டு விவசாயிகள் நலனுக்காக நெல்லுக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500/- என விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

4.அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

5.கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க,முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு அதிரடிப் படை (ANTI DRUG TASK FORCE) அமைக்கப்படும் போதைப்பொருள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.

6.பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கு, அரசு அங்கீகார அட்டை, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவை பாரப்பட்சமின்றி வழங்கப்படும்.

7.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகள்பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

8.10 மற்றும் 12-ஆம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி வழங்கி, எவ்விதப் பிணையும் இல்லாமல் ரூ. 25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும்.

9.நகர்ப்புற நடுத்தரக் குடும்பங்களின் வாடகைக் சுமையைக் குறைக்க,சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் அரசு அல்லது தனியார் பங்களிப்புடன் பல அடுக்குக் குடியிருப்புகள் கட்டப்பட்டு நியாயமான வாடகையில் வழங்கப்படும்.

10.கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் கடன் தொகையை குறைந்தபட்சம் ரூ. 1,00,000/-த்தில் இருந்து ரூ 2,00,000/-மாக உயர்த்தி, 50% மானியத்துடன் வழங்கிட வழிவகை செய்யப்படும்.

தஞ்சை_கிழக்கு_மாவட்டம்
இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை மறக்காமல் Facebook கமெண்டில் சொல்லுங்க லைக் பண்ணி Support பண்ணுங்க என்றும் உங்கள் டைம் பாஸ்