மோர் உடல் நலத்திற்கு பல நன்மைகள் இருந்தாலும் சிலர் இந்த மோரை குடிக்க கூடாது என எச்சரிக்கப்படுகின்றது
MOR
மோர் குடித்தால் குடல் ஆரோக்கியம் சீராக இருப்பதுடன் உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும் வெயில் காலத்தில் நமது உடல் நீரேற்றத்ததுடன் இருக்கும் ஆனால் உடலில் சில பிரச்சனைகள் உள்ளவர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் எனப்படுகின்றது இதற்கு காரணத்தை பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரகப் பிரச்சனைகள்
1.சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் மோர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் அதை மீறி அவர்கள் மோர் குடித்தால் அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் மோரில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சிறுநீரகப் பிரச்சனைகளை மோசமாக்கக்கூடும் இதனால் தான் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிக்க கூடாது என கூறப்படுகின்றது.
சளி இருமல் மற்றும் காய்ச்சல்
1.உங்களுக்கு சளி இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் ...


