திராட்சை<

உலர் திராட்சை தண்ணீர் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடித்தால் அதில என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம், அதில் முக்கியமான ஒன்று உலர் திராட்சை தண்ணீர், இரவு முழுவதும் ஊறவைத்த உலர் திராட்சையின் சத்து நீரில் கலந்து, காலை நேரத்தில் குடிக்கும் போது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை வழங்குகிறது,மேலும் காலையில் டீ காபி போன்றவற்றை குடிப்பதை விட கீழ் கூறப்பட்ட சத்துக்கள் தேவை என நினைப்பவர்கள் இந்த தண்ணீரை காலையில் எழுந்து குடித்து வரலாம்.

நன்மைகள்
வெறும் தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதன் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து, வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளைத் தணிக்க உதவும்,மேலும் இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. உலர் திராட்சை, இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்த ஒரு நல்ல இயற்கை பானமாக கருதப்படுகின்றது.
அதன் சாற்றைத் தொடர்ந்து அருந்துவது உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்தசோகைக்கு சிகிச்சையளிக்க உதவும். மேலும், இது உடல் பலவீனத்தைப் போக்கவும் உதவுகிறது,உலர் திராட்சை நீர் உங்கள் கல்லீரலுக்கும் மிகவும் நன்மை தரும் ஒரு பானமாகும். இது நச்சுக்களை வெளியேற்றி, உங்கள் முகத்தின் இயற்கையான பொலிவை மீட்டெடுக்க உதவுகிறது.

உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உலர் திராட்சை நீர் ஆற்றலை அளித்து, கலோரி பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் ஒரு சிறந்த பானமாகும். எனவே, உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு இது மிகவும் நன்மை அளிக்கிறது, இதைத் தவறாமல் மிதமான அளவில் உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவும். உலர் திராட்சை நீரில் பல வைட்டமின்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை மேம்படுத்துகின்றன. அடிக்கடி வரும் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க விரும்பினால், மருத்துவ குணம் கொண்ட இந்த தண்ணீரை காலையில் வறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை மறக்காமல் Facebook கமெண்டில் சொல்லுங்க லைக் பண்ணி Support பண்ணுங்க என்றும் உங்கள் டைம் பாஸ்