தலைமுடி சிகிச்சை, தற்போது மக்கள் நேரான மற்றும் பளபளப்பான கூந்தலைப் பெறுவதற்காக விலையுயர்ந்த இரசாயன சிகிச்சைகளுக்கு லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள்,இந்த சிகிச்சை மூலம் தலைமுடியை தற்காலிகமாக பளபளப்பாக்கலாம் இது காலப்போக்கில் முடி வறட்ச்சி முடி உதிர்வு மற்றும் முடியின் சத்திழப்பு போன்ற தீங்குகளை கொண்டு வரும்.

இந்த நிலையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் கூந்தலை மென்மையாகவும், நேராகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடிய, வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு இயற்கையான முறையை பதிவில் பார்க்கலாம்,இந்த இயற்கை முறை கூந்தலை நேராக்குவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், உள்ளிருந்து ஊட்டமளித்து, பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.
கூந்தலை பளபளப்பாக்கும் இயற்கை முறை
1.வீட்டில் இருக்கும் வெண்டைக்காய் நீரின் மூலம் தான் கூந்தலை பளபளப்பாக்கலாம் இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கும் மற்றும் முடி சிக்குவதைதையும் குறைக்கும் இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, கே, போலேட் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இதை ஒரு சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயற்படும் இதன் ஜெல் தன்மை வறண்ட கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து, மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

கூந்தலுக்கு வெண்டைக்காய் நீரின் நன்மைகள்
வெண்டைக்காய் தண்ணீர் முடி வேர்களுக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வைக் குறைக்கிறது. அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையை இதமாக்க்கி முடி வளர்ச்சியை தூண்டும் மேலும் முடிக்கு ஈரப்பதத்தை அளித்து, பளபளப்பைச் சேர்க்கிறது மேலும், இது வறண்ட முடியை மென்மையாகவும் பட்டுப்போன்றதாகவும் மாற்றும்.

வெண்டைக்காய் தண்ணீர் செய்வது எப்படி
1.5, 6 புதிய வெண்டைக்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒன்றரை கப் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கெட்டியான, பிசுபிசுப்பான ஜெல் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்
2.ஜெல் உருவானதும், அதை ஆறவைத்து ஒரு சல்லடை மூலம் வடிகட்டவும். இதை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 30, 40 நிமிடங்கள் கழித்து, மென்மையான ஷாம்பு கொண்டு அலசி கழுவ வேண்டும்.
3.ஷாம்பு கொண்டு தலை அலசிய பின்னரும் வெண்டைக்காய் ஜெல்லை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவ வேண்டும். இதை 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சாதாரண நீரால் அலசவும். சிறந்த பலன்களைப் பெற, இதை வாரத்திற்கு 1அல்லது 2 முறை பயன்படுத்தவும்.

இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை மறக்காமல் Facebook கமெண்டில் சொல்லுங்க லைக் பண்ணி Support பண்ணுங்க என்றும் உங்கள் டைம் பாஸ்